கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன் - உதயநிதி ஸ்டாலின்


கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன் - உதயநிதி ஸ்டாலின்
x

கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தற்போது மாமன்னன், கலக தலைவன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்து கமல்ஹாசன் தயாரிக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, ''அரசியல், சினிமா இரண்டிலும் ஒரே நேரத்தில் ஈடுபடுவது சிரமமாக உள்ளது. அரசியலை சினிமாபோல் பாவிக்க முடியாது. முழு நேரமும் கவனம் செலுத்த வேண்டும். எனவே சினிமாவில் நடிப்பதை குறைக்க நினைத்தேன். நெஞ்சுக்கு நீதியுடன் முடித்துக்கொள்ள முடிவு செய்தேன். பிறகு மாரி செல்வராஜ் வந்து மாமன்னன் கதை சொன்னதும் பிடித்துபோய் அதுவே கடைசி படம் என்று நினைத்தேன். தொடர்ந்து மகிழ் திருமேனி சொன்ன கலக தலைவன் கதை பிடித்ததால் அதில் நடிக்க முடிவு செய்தேன். அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ஒருபடம் நடிக்க இருக்கிறேன். கமல்ஹாசன் ஒரு வரிக்கதை சொன்னதும் அது பிடித்திருந்தது. நான் அந்த படத்தை தயாரிக்கிறேன் என்றேன். ஆனால் கமல்ஹாசன் ஏற்காமல் என்னையே நடிக்க சொன்னார். அவரே இயக்குனரை முடிவு செய்வார். பட வேலைகள் நடக்கிறது. கலக தலைவன் அரசியல் படம் இல்லை. கலகத்துக்கு போர், கிளர்ச்சி என்றும் அர்த்தம் உள்ளது. சமூக பிரச்சினைகளும், அதிரடி சண்டைகளும் படத்தில் இருக்கும். மாமன்னன் படத்தில் வடிவேலுவை வேறு மாதிரி பார்க்கலாம். அந்த படத்துக்கு நிச்சயம் விருது கிடைக்கும்" என்றார்.


Next Story