40 நாள் வனவாசத்தை முடித்துவிட்டு திரும்பி வந்து விட்டேன் - கீர்த்தி சுரேஷ்


40 நாள் வனவாசத்தை முடித்துவிட்டு திரும்பி வந்து விட்டேன் - கீர்த்தி சுரேஷ்
x

நடிகை கீர்த்தி சுரேஷ் 'அக்கா' என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

சென்னை,

படங்களில் நடிப்பது மட்டுமல்லாது, வெப் சீரிஸிலும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் நடிகர்கள் - நடிகைகள். அந்த வகையில் வெப் சீரிஸ் ஒன்றில் பிசியாக நடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ், 40 நாட்கள் தான் வனவாசம் சென்றதாகக் கூறி இருக்கிறார். அதாவது, 'அக்கா' என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதன் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கேரளாவின் வனப்பகுதிகளில் நடந்தது.

இந்த படப்பிடிப்பில் கவனம் செலுத்துவதற்காக சோஷியல் மீடியாவில் இருந்து இவ்வளவு நாட்கள் ஒதுங்கி இருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது படப்பிடிப்பு முடிந்து திரும்பியிருக்கிறார். இதைத்தான் "வனவாசம் முடித்து திரும்பி இருக்கிறேன்" என்று செல்லப் பிராணியுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து தெரிவித்து உள்ளார்.

மேலும், "ஷூட்டிங் முடித்து வீட்டுக்கு வரும் சந்தோஷமே தனிதான்! இருந்தாலும், என்னுடைய அடுத்த படங்களுக்கான படப்பிடிப்பு எப்போது என்று எதிர்பார்த்து இருக்கிறேன். இந்த வெப்பத்தைத் தணிக்க மழையும் வந்தது சர்ப்ரைஸான விஷயம்" என்று தெரிவித்து உள்ளார்.


Next Story