எம்.எல்.ஏ.வை விட நான் அதிகம் சம்பாதிக்கிறேன் - நடிகர் விஷால்
ஒரு எம்.எல்.ஏ. எவ்வளவு சம்பாதிக்கிறாரோ, நான் என் படங்களில் அதைவிட அதிகமாக சம்பாதிக்கிறேன்.
நடிகர் விஷால் திருப்பதியில் இரண்டு கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது மாணர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து விஷால் கூறும்போது, "என்னை பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. நான் சந்திரபாபுநாயுடுவை எதிர்த்து குப்பம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல. ஒரு எம்.எல்.ஏ. எவ்வளவு சம்பாதிக்கிறாரோ, நான் என் படங்களில் அதைவிட அதிகமாக சம்பாதிக்கிறேன். ஒரு எம்.எல்.ஏ.வுக்கு இருக்கும் பெயரும், புகழையும் விட எனக்கு அதிகமாகவே இருக்கிறது. இப்போதைக்கு அரசியலுக்கு வரும் ஆர்வம் இல்லை. ஒருவேளை வந்தாலும் ஆந்திராவில் வரமாட்டேன். ஜெகன்மோகன் ரெட்டி 3,500 கிலோமீட்டர் பாதயாத்திரை செய்தபோதே அவர்தான் வெற்றி பெற்று முதல்-மந்திரியாக போகிறார் என்று தேர்தலுக்கு ஓராண்டு முன்பே நான் தெரிவித்தேன். இப்போது அவரை நேரில் சந்தித்தேன். இதை வைத்து நான் குப்பம் தொகுதியில் போட்டியிடப் போவதாக வதந்திகள் வருகின்றன. ஜெகன்மோகன் ரெட்டி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். சாதாரண சமூக சேவை செய்யும் எல்லோருமே அரசியலில் இருப்பவர்கள் தான். தேர்தலில் போட்டியிட்டு கட்சியில் இருப்பவர்கள் மட்டுமே அரசியல்வாதிகள் என்று அர்த்தம் அல்ல''என்றார்.