ரகுல் ப்ரீத் சிங்கின் யோசனை


ரகுல் ப்ரீத் சிங்கின் யோசனை
x

பள்ளிக் கூடங்களில் பாதுகாப்பான, ஆரோக்கியமான பாலியல் கல்வியை போதிக்க வேண்டும் என ரகுல் ப்ரீத் சிங் யோசனை தெரிவித்துள்ளார்.

`தீரன் அதிகாரம் ஒன்று', 'தேவ்' படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். வெளிப்படையாக பேசக்கூடிய இவர், செக்ஸ் பற்றிய கேள்விக்கு அளித்த பதில்… "நம் நாட்டில் நாகரிகம் வளர்ந்தாலும் செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு மிக குறைவாகவே உள்ளது. பலர் அதைப் பற்றி பேசுவதை தவிர்த்துவிடுகிறார்கள். அதனாலேயே பெண்கள் பாலியல் துன்பங்களை சந்திக்க வேண்டியுள்ளது. பள்ளிக் கூடங்களில் பாதுகாப்பான, ஆரோக்கியமான பாலியல் கல்வியை போதிக்க வேண்டும். அதைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணங்களால் 'எச்.ஐ.வி.' போன்ற பால்வினை நோய்களுக்கு பலியாக நேரிடுகிறது" என்றார். தற்போது 'இந்தியன்-2' படத்தில் நடித்து வருகிறார் ரகுல்.


Next Story