இதுமட்டும் நிறைவேறிவிட்டால் தெருவெல்லாம் தமிழ் செழிக்கும்... கவிஞர் வைரமுத்து பதிவு


இதுமட்டும் நிறைவேறிவிட்டால் தெருவெல்லாம் தமிழ் செழிக்கும்... கவிஞர் வைரமுத்து பதிவு
x

கோப்புப்படம் 

தள்ளிப் போடுவதால் லட்சியங்கள் தள்ளாடிப்போகின்றன; விரைந்து செயல்படுவோம் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

சென்னை,

எந்தப் பெயரையும் தமிழ்ப்படுத்த ஒரு குழு அமைப்போம்; அரசின் பெருந்துணையும் கோருவோம். இதுமட்டும் நிறைவேறிவிட்டால் தெருவெல்லாம் தமிழ் செழிக்கும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

வங்கக் கடல்போல் நிகழ்ந்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் ஒரு பெருங்கோரிக்கை வைத்தேன். 'தமிழ்நாட்டின் அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் விளங்கவேண்டும்' என்றேன். நான் பேசிமுடித்த மறுகணமே 'அப்படியே செய்து முடிப்போம்' என்று அறிவித்தார் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா. நான் மகிழ்ந்துபோனேன்.

எந்தப் பெயரையும் தமிழ்ப்படுத்த ஒரு குழு அமைப்போம்; அரசின் பெருந்துணையும் கோருவோம். இதுமட்டும் நிறைவேறிவிட்டால் தெருவெல்லாம் தமிழ் செழிக்கும்; வாசிப்போர் நாவில் தமிழ் தவழ்ந்தோடும். தள்ளிப் போடுவதால் லட்சியங்கள் தள்ளாடிப்போகின்றன; விரைந்து செயல்படுவோம். அருள்கூர்ந்து ஆதரவு தாருங்கள்" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



Next Story