''எனக்கு நல்லநேரம் நடக்கிறது" - நடிகை ராஷ்மிகா மந்தனா


எனக்கு நல்லநேரம் நடக்கிறது - நடிகை ராஷ்மிகா மந்தனா
x

‘‘எனக்கு நல்லநேரம் நடக்கிறது” என்று நடிகை ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகிலும் பிரபல நடிகையாக இருக்கிறார். இவரது நடிப்பில் அனிமல் என்ற இந்தி படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

தெலுங்கில் ரெயின்போ என்ற கதாநாயகி முக்கியத்துவம் அளிக்கும் படத்திலும் நடிக்கிறார். புஷ்பா 2 படமும் தயாராகி வருகிறது. இப்படி நிறைய படங்கள் கைவசம் வைத்துள்ளதால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு இவரது கால்ஷீட் இல்லை என்கின்றனர்.

இதுகுறித்து ராஷ்மிகா கூறும்போது, "நாம் சாப்பிடும் ஒவ்வொரு அரிசியின் மீதும் நமது பெயர்கள் எழுதி இருக்கும் என்று சொல்லுவார்கள். என்னை கேட்டால் நடிகர் நடிகைகள் நடிக்கும் கதாபாத்திரங்கள் மீது கூட அவர்களின் பெயர்கள் எழுதியிருந்தால்தான் அந்த கதாபாத்திரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல நேரம் என்பது நடக்கும். இப்போது எனக்கு நல்ல நேரம் நடக்கிறது. இவ்வளவு அதிகமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்ற ஆனந்தத்தை விட நல்ல நல்ல கதைகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது'' என்றார்.

1 More update

Next Story