சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமானவரித்துறை அதிரடி ரெய்டு...!
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வீட்டில் வருமானவரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
தமிழ் சினிமா துறையில் பிரபல பைனான்சியர் அன்புச்செழியன். இவரது வீடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது.
இந்நிலையில், அன்புச்செழியன் வீட்டிற்கு இன்று அதிகாலை 5 மணிக்கு வந்த வருமான வரித்துறையினர் அங்கு அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரையில் அன்புச்செழியனுக்கு தொடர்புடைய 40 -க்கும் மேற்பட்ட இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையை சேர்ந்த அன்புச்செழியன் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
கடந்த 2020-ம் ஆண்டும் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story