சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை தவறவிட்டது இந்தியாவின் 'ஆல் தட் ப்ரீத்ஸ்'..!


சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை தவறவிட்டது இந்தியாவின் ஆல் தட் ப்ரீத்ஸ்..!
x

சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை இந்தியாவின் 'ஆல் தட் ப்ரீத்ஸ்'தவறவிட்டது.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகவும், மிகப்பெரிய கவுரவமாகவும் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து திரைப்பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு, 95-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில், திரைத்துறையில் சிறந்த படம், நடிகர், துணை நடிகர், நடிகை உள்பட பல்வேறு பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை இந்தியாவின் 'ஆல் தட் ப்ரீத்ஸ்' படம் தவறவிட்டது. ஆல் தட் ப்ரீத்ஸ் ஆவணப்பட பிரிவிலும், தி எலிபெண்ட் விஸ்பெர்ஸ் ஆவண குறும்படப் பிரிவிலும் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்திய ஆவணப் படமான ஆல் தட் ப்ரீத்ஸ் ஆஸ்கர் விருதை தவறவிட்டது.

ஷௌனக் சென் இயக்கிய 'ஆல் தட் ப்ரீத்ஸ்' திரைப்படதை அவரே தயாரித்திருந்தார். இந்தியாவில் காயம்பட்ட பறவைகளை மீட்டு சிகிச்சை அளிக்கும் சகோதரர்களான முகமது சவுத், நதீம் ஷேஜாத் ஆகியோரை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியிருந்தது. கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஆல் தட் ப்ரீத்ஸ் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக ஆஸ்கர் விருதை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட ஆல் தட் ப்ரீத்ஸ் ஏமாற்றத்துடன் வெளியேறியது.


Next Story