'இன்னொரு ராஜா கெட்டவராம்' - இணையத்தில் வைரலாகும் தனுஷ் பட பாடல்


இன்னொரு ராஜா கெட்டவராம் - இணையத்தில் வைரலாகும் தனுஷ் பட பாடல்
x

நடிகர் தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். 'நானே வருவேன்' திரைப்படம் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாவது பாடல் 'ரெண்டு ராஜா' தற்போது வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் தனுஷ் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை தனுஷ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story