ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா?


ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா?
x

ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், 2007-ம் ஆண்டில் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 10 வயதில் ஆராதியா என்ற மகள் இருக்கிறார்.

திருமணத்துக்கு பின்னரும் ஐஸ்வர்யா ராய் பல படங்களில் நடித்தார். தமிழில் 'ராவணன்', 'எந்திரன்' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது அவரது நடிப்பில் 'பொன்னியின் செல்வன்' படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அவரது 'நந்தினி' கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படுகிறது.

தற்போது ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சற்று குண்டாகவும், பூரிப்பாகவும் காணப்பட்டார். ஆனாலும் இதுகுறித்து ஐஸ்வர்யா ராய் தரப்பில் இருந்து விளக்கமோ, மறுப்போ வரவில்லை.


Next Story