நாளை 'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழா: சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினி


நாளை ஜெயிலர் இசை வெளியீட்டு விழா: சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினி
x

10 நாட்களாக மாலத்தீவில் ஓய்வில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார்.

சென்னை,

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தின் கிராண்ட் இசை வெளியீட்டு விழா, நாளை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது முந்தைய படங்களைப் போல் இல்லாமல், சிறையில் ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸுக்கு தயாராகி வருகிறது

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாலத் தீவில் ஓய்வில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இதில் கலந்து கொள்வதற்காக தனது சுற்றுலாவை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினார்.

இசை வெளியீட்டு விழாவில் ஜெயிலர் படக்குழு அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த விழாவுக்கு சிறப்பு விருந்திரனாக உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story