மலேசியாவில் வசூல் சாதனை படைத்த 'ஜெயிலர்'


மலேசியாவில் வசூல் சாதனை படைத்த ஜெயிலர்
x

'ஜெயிலர்' திரைப்படம் மலேசியாவில் வசூல் சாதனை படைத்துள்ளது.

சென்னை,

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. 'ஜெயிலர்' படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் , இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கார் மற்றும் காசோலைகளை பரிசாக வழங்கினார். மேலும் படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு தங்க நாணயங்களையும் பரிசாக வழங்கினார்.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் மலேசியாவில் வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை மலேசியாவில் வெளியான இந்திய திரைப்படங்களின் வசூல் சாதனையை இப்படம் முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மலேசியாவில் ஜெயிலர் படத்தை வெளியிட்ட 'ஐங்கரன்' நிறுவனம் தனது எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளது. ரசிகர்கள் தங்களின் சமூக வலைத்தளங்களில் இந்த தகவலை பகிர்ந்து ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
Next Story