தென்னிந்திய படத்தில் ஜான்வி


தென்னிந்திய படத்தில் ஜான்வி
x

மறைந்த நடிகை தேவியின் மகள் ஜான்வி கபூர் இந்தியில் `தடக்' படம் மூலம் அறிமுகமாகி `கோஸ்ட் ஸ்டோரீஸ்', `ரூஹி', `குட்லக் ஜெர்ரி', `மிலி' என்று பல படங்களில் நடித்துள்ளார். தற்போது `மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ்' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார்.

தமிழில் பையா 2-ம் பாகத்தில் ஆர்யாவுடன் நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. இதனை ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர் மறுத்தார். இந்த நிலையில் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடிக்க ஜான்வியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படம் மூலம் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். விரைவில் தமிழ் படத்திலும் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

1 More update

Next Story