அழகின் ரகசியத்தை பகிர்ந்த ஜான்வி கபூர்


அழகின் ரகசியத்தை பகிர்ந்த ஜான்வி கபூர்
x

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்டு வருகிறார். இந்த நிலையில் தனது அழகு ரகசியம் குறித்து ஜான்வி கபூர் அளித்துள்ள பேட்டியில், 'முகம் பொலிவாக மின்ன ஒரே ஒரு டிப்ஸ் என் அம்மாவிடம் கற்றுக்கொண்டேன்.

முகத்தை நன்றாக தண்ணீரால் கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து விடவேண்டும். அதன் பிறகு ஆவி பிடிக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் தயிர், இரண்டு ஸ்பூன் தேனை ஊற்றி பிசைந்து வைத்த வாழைப்பழத்தில் நன்றாக கலக்க வேண்டும். இதை முகத்தில் பூசி ஐந்து நிமிடங்கள் அப்படியே விட்டு விடவேண்டும். இது சருமத்திற்கு ஈரத்தன்மையுடன் போஷாக்கையும் கொடுக்கும்.

பாதி அறுத்த ஆரஞ்சு பழத்தில் விதைகளை நீக்கி முகத்தின் மீது சிறிது நேரம் தேய்க்க வேண்டும் அதன் பிறகு சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். இது டெட் ஸ்கின்னை நீக்கிவிடும். இரண்டு மூன்று நிமிடங் களுக்கு பிறகு குளிர்ந்த நீரால் கழுவினால் போதும். முகத்தில் பொலிவு வந்து விடும். நீங்களும் முயற்சி செய்யுங்கள்'' என்றார்.

1 More update

Next Story