கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!


கார்த்தி நடிக்கும் ஜப்பான் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!
x

நடிகர் கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான கார்த்தி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. தொடர்ந்து இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியான 'சர்தார்' திரைப்படம் ரூ.100 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கார்த்தி நடிக்கும் 25-வது படத்தை 'குக்கூ', 'ஜோக்கர்' ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ஜப்பான்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் 'நம்ம வீட்டுப் பிள்ளை' பட நாயகி அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

'ஜப்பான்' திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த நிலையில் ஜப்பான் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Next Story