திரில்லர் கதையில் ஜெயம் ரவி


திரில்லர் கதையில் ஜெயம் ரவி
x

ஜெயம்ரவி. நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள படம் `இறைவன்'.

இந்தப் படத்தை ஐ.அஹமத் டைரக்டு செய்துள்ளார். சுதன் சுந்தரம், ஜெயராம் தயாரித்துள்ளனர். படம் குறித்து படக்குழுவினர் கூறும்போது, ``சுவாரஸ்யமான கதைக் களத்தில் அதிரடி திரில்லர் படமாக தயாராகிறது. உலகம் முழு வதும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் கதையம்சத்தில் உருவாகி உள்ளது. திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி சரியான நேரத்தில் முடித்துள்ளோம். அஹமதுவின் முந்தைய வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன், ஜனகனமன படங்களை போலவே இதுவும் தனித்துவமான கதைக்களத்தில் இருக்கும்''என்றனர்.

இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றத்தை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். படத்தில் விஸ்வரூபம் பட வில்லன் ராகுல்போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், விஜயலட்சுமி, சார்லி, அழகம்பெருமாள், வினோத் கிஷன், பக்ஸ். படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: ஹரி கே.வேதாந்த், இசை:யுவன் சங்கர் ராஜா,

1 More update

Next Story