குகை அரங்கில் ஜித்தன் ரமேஷ்


குகை அரங்கில் ஜித்தன் ரமேஷ்
x

ஜித்தன் ரமேஷ் `ரூட் நம்பர் 17' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் நாயகியாக அஞ்சு பாண்டியா நடித்துள்ளார். ஹரிஷ் பெராடி வில்லனாக வருகிறார். அருவி மதன், அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, காசி விசுவநாதன், அற்புதாநந்தம் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை தாய் நிலம் படத்தை இயக்கி பிரபலமான அபிலாஷ் ஜி.தேவன் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தில் சில சாகச காட்சிகளில் ஜித்தன் ரமேஷ் டூப் போடாமல் நடித்து இருக்கிறார்.

பூமிக்கு அடியில் 5 ஆயிரத்து 500 சதுர அடியில் பிரமாண்ட குகை அரங்கை, தென்காசிக்கு அருகே உள்ள காட்டுக்குள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். காற்று அதிகம் வராத இந்த குகைக்குள் 35 டிகிரி வெப்ப நிலையில் ஜித்தன் ரமேஷ் தினமும் 14 மணிநேரம் 22 நாட்கள் நடித்து இருக்கிறார். சில நேரம் வெப்பத்தை தாங்க முடியாமல் தண்ணீரை உடலில் தெளித்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் நடித்து இருக்கிறார். டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்துள்ளார். இசை: அவுசே பச்சன், ஒளிப்பதிவு: பிரசாந்த் பிரணவம்.

1 More update

Next Story