ஜூனியர் என்.டி.ஆருக்கு ரூ.571 கோடி சொத்து


ஜூனியர் என்.டி.ஆருக்கு ரூ.571 கோடி சொத்து
x

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆர், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கிறார்.

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஆஸ்கார் விருது விழாவில் பங்கேற்று விட்டு திரும்பி உள்ளார். இந்த நிலையில் ஜூனியர் என்.டிஆரின் சொத்து விவரங்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இவருக்கு மொத்தம் ரூ.571 கோடிக்கு சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு படத்துக்கு ஜூனியர் என்.டி.ஆர் ரூ.36 கோடிவரை சம்பளம் வாங்குகிறார். ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ரூ.25 கோடிக்கு சொகுசு பங்களா உள்ளது.

ஜூனியர் என்.டி.ஆருக்கு மாத வருமானமாக ரூ.3 கோடி வருகிறது என்கின்றனர். பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள் வைத்து இருக்கிறார். அவசர தேவைகளுக்கு தனியார் ஜெட் விமானத்தை பயன்படுத்துகிறார். வெளிநாடுகளில் நிறையபங்களாக்கள் வாங்கி போட்டுள்ளார்.

1 More update

Next Story