இயக்குநர் விக்னேஷ் சிவனின் மகளிர் தின வாழ்த்துப் பதிவு


இயக்குநர் விக்னேஷ் சிவனின் மகளிர் தின வாழ்த்துப் பதிவு
x
தினத்தந்தி 8 March 2024 1:48 PM GMT (Updated: 8 March 2024 3:02 PM GMT)

நயன்தாராவின் படத்தை பகிர்ந்து மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, கடந்த 2022-ம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

நயன்தாரா குடும்ப விவகாரத்தில் பல்வேறு வதந்திகள் வெளியான நிலையில், பிரிவு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் விமானத்தில் பயணிக்கும் புகைப்படத்தை நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நயன்தாரா வைன் கிளாசில் இருப்பது போன்ற புகைப்படத்தை இணைத்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நயன்தாராவின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அவர், " வயசாக வயசாக மெருகேறிக்கொண்டே இருக்கும் இரண்டே விசயம். என் அழகிய தங்க பெண்ணுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.


Next Story