21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தி படத்தில் ஜோதிகா


21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தி படத்தில் ஜோதிகா
x

21 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார்.

தென் இந்தியாவில் வெற்றிப்படங்களின் கதாநாயகியாக பெயர் பெற்றவர் நடிகை ஜோதிகா. இவர் இந்தியில் நடித்த முதல் படம் 'டோலி சஜா கே ரக்கீனா' 1997-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ஜோதிகா 2001-ல் 'லிட்டில் ஜான்' என்ற இந்தி படத்தில் நடித்து இருந்தார். அதன் பிறகு இந்தியில் அவர் படங்கள் எதுவும் நடிக்கவில்லை, தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். இது ஸ்ரீகாந்த் பொல்லா என்ற தொழில் அதிபரின் வாழ்க்கை வரலாறு படம். இதில் தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார். துஷார் இத்ராணி இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஜோதிகாவை படக்குழுவினர் அணுக அவரும் சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜோதிகா தற்போது மலையாளத்தில் தயாராகும் காதல் படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார்.

1 More update

Next Story