மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஜோதிகா... 'காதல் தி கோர்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு..!


மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஜோதிகா... காதல் தி கோர் திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு..!
x

'காதல் தி கோர்' திரைப்படம் வருகிற நவம்பர் 23-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, தற்போது நடிகர் மம்முட்டியுடன் 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இந்த படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார்.

காதல் தி கோர் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், 'காதல் தி கோர்' திரைப்படம் வருகிற நவம்பர் 23-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'மம்மூட்டி கம்பெனி' வெளியிட்டுள்ள பதிவில், 'காதல் தி கோர் திரைப்படம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வருகிற நவம்பர் 23ந் தேதி வெளியாகும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story