காதலில் காளிதாஸ் ஜெயராம்...! காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்...!


காதலில் காளிதாஸ் ஜெயராம்...! காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்...!
x

மாடலும் நடிகையுமான தாரிணி காளிங்கராயருடன் தன்னுடைய நெருக்கமான புகைப்படத்தை பகிர்ந்து காதலுக்கான ஹிண்டையும் கொடுத்துள்ளார்.

சென்னை

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் ஜெயராம். இவர் அண்மையில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

இவருடைய மகன் தான் காளிதாஸ் ஜெயராம். இவர் கமல்ஹாசன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த விக்ரம் படத்தில் கமலின் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது காதலியின் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார்.

முதல் முறையாக தனது காதலியை அனைவருக்கும் அறிமுகம் செய்துள்ளார்.

. காளிதாஸ் ஜெயராம் பகிர்ந்துள்ள புதிய புகைப்படம் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காளிதாஸ் ஜெயராம் மாடல் அழகி மற்றும் லிவா மிஸ் திவா 2021 ரன்னர்-அப் தாரிணி காலிங்கராயருடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

காளிதாஸ் ஜெயராமும், தாரிணியும் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காளிதாஸ் ஜெயராம், தலைப்பில் இதயம் சின்னத்துடன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.தாரிணி விஷுவல் கம்யூனிகேஷன் பட்டதாரி.

காளிதாஸ் ஜெயராம் பகிர்ந்துள்ள புகைப்படத்திற்கு அம்மா பார்வதி, சகோதரி மாளவிகா மற்றும் பிற நட்சத்திரங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை கலயாணி பிரியதர்ஷன், அபர்ணா பாலா முரளி, நமீதா, சஞ்சனா, காயத்ரி சங்கர் ஆகியோர் உள்ப்ட பலரும் இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து, எப்போது திருமணம் என்று பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

காளிதாஸ் ஜெயராம் 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பா ரஞ்சித் எழுதி இயக்குகிறார். ஏ கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.



1 More update

Next Story