படப்பிடிப்பை நிறைவு செய்த கமல்ஹாசன்... ஏப்ரலில் வெளியாகிறதா 'இந்தியன்-2'...?


படப்பிடிப்பை நிறைவு செய்த கமல்ஹாசன்... ஏப்ரலில் வெளியாகிறதா இந்தியன்-2...?
x

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

சென்னை,

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் 'இந்தியன்-2'. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சமுத்திரக்கனி, சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல்பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருப்பதி, தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. இதனிடையே சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில் 'இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பை நடிகர் கமல்ஹாசன் நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story