மீண்டும் திரைக்கு வரும் கமல்ஹாசனின் 'ஆளவந்தான்' ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு..!


மீண்டும் திரைக்கு வரும் கமல்ஹாசனின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
x

படத்தை உலகம் முழுவதும் 1,000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் தாணு திட்டமிட்டுள்ளார்.

சென்னை,

கடந்த 2001-ம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'. தயாரிப்பாளர் தாணுவின் 'வி கிரியேஷன்ஸ்' தயாரித்திருந்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனீஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனிடையே, 22 வருடத்திற்கு பிறகு 'ஆளவந்தான்' திரைப்படம் டிஜிட்டல் வெர்ஷனில் மீண்டும் வெளியாக உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. படத்தின் ரீ-ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், படத்தை உலகம் முழுவதும் 1,000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய தாணு திட்டமிட்டுள்ளார். அதன்படி வரும் டிசம்பர் 8-ந்தேதி 'ஆளவந்தான்' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.




Next Story