முத்த காட்சியில் நடிக்க கீர்த்தி சுரேஷ் சம்மதம்?


முத்த காட்சி ஓகே தெரிவித்த கீர்த்தி சுரேஷ்
x

கீர்த்தி சுரேஷ் இந்தி படமொன்றில் முத்த காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல் பரவி உள்ளது.

சென்னை,

சினிமாவில் முத்தக் காட்சி சாதாரணமாகி விட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் துணிச்சலாக முத்த காட்சிகளில் நடிகைகள் நடிக்க தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் இந்தி படமொன்றில் முத்த காட்சியில் நடிக்க சம்மதம் சொல்லி விட்டதாக தகவல் பரவி உள்ளது.

தமிழ் பட நடிகைகள் பலர் இந்தி படங்களில் நடிக்க தொடங்கி உள்ளனர். கீர்த்தி சுரேசுக்கும் 'பேபி ஜான்' என்ற இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இதில் வருண் தவான் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில்தான் கீர்த்தி சுரேஷ் முத்த காட்சியில் நடிக்க இருக்கிறாராம்.

முத்த காட்சியில் நடிக்க சம்மதித்தபிறகே அவரை ஒப்பந்தம் செய்தார்களாம். இந்தி பட வாய்ப்புகளை பிடிக்கவே முத்த காட்சிக்கு அவர் இறங்கி வந்து இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கில் குடும்ப பாங்கான வேடங்களில் வந்த கீர்த்தி சுரேஷ் உதட்டோடு உதடு முத்தமிடும் காட்சியில் நடிக்க சம்மதித்ததாக பரவும் தகவல் திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முத்த காட்சியில் நடிக்க விருப்பம் இல்லை. கோடி பணம் கொடுத்தாலும் அதுபோன்ற காட்சியில் நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பேன் என்று கீர்த்தி சுரேஷ் கூறியது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story