இன்ஸ்டாகிராமில் ரசிகருக்கு சுவாரசியமான பதிலளித்த கீர்த்தி சுரேஷ்


இன்ஸ்டாகிராமில் ரசிகருக்கு சுவாரசியமான பதிலளித்த கீர்த்தி சுரேஷ்
x
தினத்தந்தி 25 Jan 2024 8:45 PM GMT (Updated: 26 Jan 2024 3:08 AM GMT)

கீர்த்தி சுரேஷ் 'தெறி' படத்தின் இந்தி ரீமேக் மூலம் முதன்முறையாக இந்தி திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார்.

சென்னை,

கோலிவுட், டோலிவுட், மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாகக் கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் , 'தெறி' படத்தின் இந்தி ரீமேக் மூலம் முதன்முறையாக இந்தி திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார். அட்லீயின் மனைவி ப்ரியா அட்லீ, ஜோதி தேஷ்பாண்டே உள்ளிட்டோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர்களுள் ஒருவரான வருண் தவானுக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் நிலையில், நடிகை வாமிகா கபி இப்படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடிக்கிறார். இயக்குநர் ஏ.காலீஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

மேலும் இவர் 'சைரன்', 'கன்னிவெடி', 'ரகு தாத்தா', 'ரிவால்வர் ரீட்டா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷின், டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் 233 நாட்கள் தொடர்ந்து குறுஞ்செய்தியை அனுப்பி அவரது பதிலை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தார்.இந்த நிலையில் 234 வது நாளில், அந்த ரசிகருக்கு கீர்த்தி சுரேஷ் பதில் அளித்துள்ளார். அதில் 'ஓ இது 234-வது நாள். இது மிகவும் பேன்சியான நம்பர்.

அதேவேளை தாமதமாக உங்களுக்கு பதில் அளித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ' என கீர்த்தி சுரேஷ் அதில் குறிப்பிட்டுள்ளார். ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷின் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story