'பயர் புஷ்பாவாக' கோவை சரளா - 'கிக்' படத்தின் புதிய போஸ்டர்


பயர் புஷ்பாவாக கோவை சரளா - கிக் படத்தின் புதிய போஸ்டர்
x

நடிகர் சந்தானம் நடித்துள்ள 'கிக்' திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'கிக்'. தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

பார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார். சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், 'கிக்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிகை கோவை சரளா 'பயர் புஷ்பா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


Next Story