``ஹீரோக்களிடம் நல்ல விஷயங்கள் கற்றேன்''-நடிகை காஜல் அகர்வால்


``ஹீரோக்களிடம் நல்ல விஷயங்கள் கற்றேன்-நடிகை காஜல் அகர்வால்
x

துறுதுறு நடிப்பால் கலக்கிய காஜல் அகர்வாலுக்கு தமிழ், தெலுங்கில் நிறைய ரசிகர்கள் உள்ளனர் .

திருமணம், குழந்தை என்று ஆனபிறகும் மார்க்கெட் குறையாமல் ரவுண்ட் கட்டி வருகிறார். கமல்ஹாசனுடன் நடிக்கும் இந்தியன்- 2 பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக இருக்கிறது. இந்த நிலையில் சினிமா மற்றும் சொந்த வாழ்க்கை அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ள அவரது பேட்டியில் இருந்து...

`'ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பித்த எனது சினிமா வாழ்க்கை பிறகு பெரிய பெரிய நடிகர்களுடன் தொடர்ந்து இப்போது கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் அளவுக்கு இனிமையாக போய்க் கொண்டு இருக்கிறது. நான் பணியாற்றிய அனைத்து ஹீரோக்களிடமிருந்தும் ஏதோ ஒரு நல்ல விஷயத்தை கற்றுக் கொண்டேன். சமந்தா, தமன்னாவுடன் நெருக்கமாக இருப்பேன். நிறைய விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

பல பேருக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் எங்கள் காஜூவை தவிர மற்ற எந்த நாயை பார்த்தாலும் எனக்கு மிகவும் பயம். 10 ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனேன். அதன் பிறகு தமிழ் ரசிகர்களும் ஆதரவு கொடுத்தார்கள். மும்பையை சேர்ந்த நான் மாஸ் மீடியாவில் டிகிரி படித்தேன். மாடலிங் செய்ய ஆரம்பித்த பிறகு சினிமாவின் கதவை தட்டினேன். அவ்வளவுதான் படிப்பு 'கட்' ஆனது. அப்பா வினய் அகர்வால் டெக்ஸ்டைல் வியாபாரி.

என் சினிமா விவகாரங்கள் அனைத்தையும் அம்மா பார்த்துக் கொள்கிறார். அம்மாவிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அம்மா தான் எனது குரு. என் கணவர் கவுதம் என்னை சின்னக் குழந்தைமாதிரி பார்த்துக் கொள்கிறார். திருமணமானதால் பெற்றோரை விட்டு விலகி இருக்கிறேன் என்ற எண்ணம் சிறிதளவு கூட வரவிடமாட்டார்.

மகன் நெயில் எனக்கு கொடுத்த தாய்மையின் அனுபவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிவது பிடிக்கும். நாம் அணியும் உடை நமக்கு கம்பர்ட்டாக இருக்க வேண்டும். யாருடைய பாராட்டுக்காகவோ விலை உயர்ந்த உடைகளை அணிவது எனக்கு பிடிக்காது. உணவு விஷயத்திற்கு வந்தால் ஆசிய உணவுகள் அனைத்தும் பிடிக்கும். தாய்லாந்து, ஜப்பானீஸ், வியட்நாமின் உணவுகளை மிகவும் என்ஜாய் செய்வேன். இனிப்பு உணவுகளை பார்த்தால் ஒரு யுத்தமே செய்வேன்.

சாக்லேட் சீப் ப்ளேவர் ஐஸ்கிரீம் பிடிக்கும். மேடம் துஷாட்ஸ் மியூசியத்தில் உள்ள மெழுகு பொம்மைகளில் தென்னிந்திய ஹீரோயின் நான் மட்டும்தான். அதை நினைத்தால் கொஞ்சம் பெருமையாகவே இருக்கிறது. அது என் பொறுப்பை இன்னும் அதிகமாக்கியது. அந்த கவுரவத்தை காப்பாற்றிக் கொள் வதற்கு முயற்சி செய்வேன். நடிகையாக, மகளாக, மனைவியாக, தாயாக ஒரு பெண் எத்தனை கதாபாத்திரங்களில் வாழ வேண்டியிருக்கிறது. என் விஷயத்திற்கு வந்தால் சினிமாக்களோடு நிஜ வாழ்க்கையில் கூட ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சமநியாயம் செய்தேன் என்கிற திருப்தியோடு இருக்கிறேன்''


Next Story