பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா மறைவு: நடிகர் கமல்ஹாசன் இரங்கல்


பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா மறைவு: நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
x

மறைந்த பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா, தமிழில் 'சத்யா' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்

சென்னை,

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

'எல்லா நடிகர்களுக்கும் அம்மா' என்று செல்லப் பெயரெடுத்தவர் மலையாளத் திரையின் சிறந்த குணச்சித்திர நடிப்புக் கலைஞரான கவியூர் பொன்னம்மா. அவரது நடிப்புத் திறத்தால் அவரைத் தமிழ்த் திரைக்கும் (சத்யா) அழைத்து வந்தோம்.

தன் 13 ஆம் வயதில் மேடை நாடகக் கதாநாயகியாக அறிமுகமானவரின் கலைப் பயணம், சினிமா, சீரியல், விளம்பரங்கள் என்று தொடர்ந்தது.

'அம்மா' கவியூர் பொன்னம்மா இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்துகிறது. அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவிக்கிறேன். அன்னாருக்கென் அஞ்சலி.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.


Next Story