லியோ படத்தின் புதிய அப்டேட்; ஹரோல்டு தாஸாக ஆக்சன் கிங் அர்ஜூன் மிரட்டல்...!!!


லியோ படத்தின் புதிய அப்டேட்; ஹரோல்டு தாஸாக ஆக்சன் கிங் அர்ஜூன் மிரட்டல்...!!!
x
தினத்தந்தி 15 Aug 2023 7:51 PM IST (Updated: 15 Aug 2023 7:56 PM IST)
t-max-icont-min-icon

ஆக்சன் கிங் அர்ஜூனின் பிறந்தநாளான இன்று லியோ படத்தின் புதிய கிளிப் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம், லியோ. அர்ஜூன், மன்சூர் அலிகான், திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். இதனால் படத்தின் மற்ற பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கி அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி பல்வேறு அப்டேட்கள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும்படி வந்த வண்ணம் உள்ளன.

சில தினங்களுக்கு முன், சஞ்சய் தத்தின் கிளிப் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல் நடிகர் அர்ஜூனின் பிறந்தநாளான இன்று, லியோ படத்தின் புதிய கிளிப் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் மிரட்டலான தோற்றத்தில் அர்ஜூன் நடித்து அசத்தி உள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்களைக் கவர்ந்த அது 'டிரெண்டிங்'கிலும் இடம் பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story