விக்ரம் பிரபு நடிக்கும் 'ரெய்டு' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!


விக்ரம் பிரபு நடிக்கும் ரெய்டு படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!
x

நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் 'ரெய்டு' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் விக்ரம் பிரபு 'டாணாக்காரன்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் 'பாயும் ஒளி நீ எனக்கு' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து, விக்ரம் பிரபு அடுத்ததாக நடிக்கும் படம் 'ரெய்டு'. இந்த படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இயக்குனர் முத்தையா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ், எம் ஸ்டூடியோஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், வெங்கட் பிரபு மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


1 More update

Next Story