மம்மூட்டி நடிப்பில் வெளியான 'பிரமயுகம்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..எப்போது தெரியுமா?


மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரமயுகம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..எப்போது தெரியுமா?
x

மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘பிரமயுகம்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சென்னை,

ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி நடித்திருந்த திரைப்படம் 'பிரமயுகம்'. இந்த படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த மாதம் 15-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டாலிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராமச்சந்திர சக்கரவர்த்தி மற்றும் எஸ்.சஷிகாந்த் தயாரித்திருந்த இந்த படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருந்தார். 'பிரமயுகம்' திரைப்படம் 75 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.

மம்மூட்டி படங்களை மொழிகளை கடந்து கண்டு ரசிக்கும் ரசிகர்கள் அதன் ஓடிடி ரிலீசுக்காக காத்திருக்கும் நிலையில், அவர்களுக்காக குட் நியூஸ் வெளியாகி இருக்கிறது. 4 வார காலத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான 'பிரமயுகம்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக காத்திருக்கிறது.

கடந்த பிப்ரவரி 15ம் தேதி வெளியான 'பிரமயுகம்' திரைப்படம் வரும் 15ம் தேதி சரியாக ஒரு மாத காலத்தில் ஓடிடி-க்கு ஓடி வருகிறது. ஓடிடி-யில் சோனி லைவ் சேனலில் இந்த படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story