டைரக்டரை மணக்கிறார்: நயன்தாராவுக்கு நாளை திருமணம்


டைரக்டரை மணக்கிறார்: நயன்தாராவுக்கு நாளை திருமணம்
x

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் நாளை (9-ந் தேதி) நடக்கிறது.

நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. திருப்பதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், திருமண மண்டபத்தை நேரில் சென்று பார்த்து வந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் நாளை (9-ந் தேதி) நடக்கிறது. இதனை அதிகாரபூர்வமாக விக்னேஷ் சிவன் அறிவித்து உள்ளார். இதுகுறித்து விக்னேஷ் சிவன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "எனது தனிப்பட்ட வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு செல்கிறேன். ஜூன் 9-ந் தேதி (நாளை) நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன், மாமல்லபுரத்தில் திருமணம் நடக்க உள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் நாளை (9-ந் தேதி) நடக்கிறது.

ஆரம்பத்தில் திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டோம். ஆனால் இங்கிருந்து எல்லோரையும் அங்கு அழைத்து செல்வதில் சிரமம் இருந்தது. இதுபோன்ற சில காரணங்களால் மாமல்லபுரத்தில் திருமணத்தை நடத்துகிறோம். நான் இயக்கிய போடாபோடி படத்தில் இருந்து என்னை ஆதரித்து வரும் அனைவருக்கும் நன்றி'' என்றார்.


Next Story