மீண்டும் நடிக்கும் மீனா


மீண்டும் நடிக்கும் மீனா
x

நடிகை மீனா தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதை மீனாவே அறிவித்து உள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 1990-களில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்தவர் மீனா. 2019-ல் சாகர் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

நைனிகாவும் தாயைப் போலவே விஜய்யின் 'தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கடந்த வருடம் மீனாவின் கணவர் சாகர் நுரையீரல் தொற்றினால் மரணம் அடைந்தார்.

இதனால் நிலை குலைந்து துக்கத்தில் மூழ்கிய மீனா பல மாதங்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதை மீனாவே அறிவித்து உள்ளார். படப்பிடிப்பு புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள மீனா அதில், "மீண்டும் கேமரா முன்னால் நிற்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னொரு மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்'' என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்.

மீனா நடிக்கும் படத்தை மலையாள இயக்குனர் ஜெய ஜோஸ் ராஜ் இயக்குகிறார். மீனாவுக்கு வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

1 More update

Next Story