'கோடி நன்றிகள்' - நடிகர் விக்ரம் பதிவு


Million Thanks - Actor Vikram
x

'தங்கலான்', விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகயும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை,

இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'தங்கலான்'. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியானது.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகயும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தங்கலான் முதல் நாளில் மட்டும் உலகளவில், 26 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில், நடிகர் விக்ரம் 'தங்கலான்' திரைப்படத்திற்கு மக்கள் அளித்து வரும் வரவேற்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'அளவிட முடியாத அன்பை கொடுத்ததற்கு நன்றி. இதைவிட சிறப்பான எதையும் கேட்க முடியாது. கோடி நன்றிகள்', என்று பதிவிட்டுள்ளார்.


Next Story