தாலியுடன் கருப்பு கவர்ச்சி பனியனில் நயன்தாராவின் புகைப்படங்கள்
கழுத்தில் தாலியுடன் கருப்பு நிற கவர்ச்சி பனியன் அணிந்து கொண்டு எடுக்கப்பட்ட நயன்தாராவின் புகைப்படங்கள்.
சென்னை
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடந்தது.திருமணம் முடிந்த கையோடு தம்பதியினர் தேனிலவு பயணமாக தாய்லாந்துக்கு புறப்பட்டனர். ஒரு வாரத்துக்கு பிறகு நாடு திரும்பினார்கள்.அதன் பின்னர் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பு பணிகளில் நயன்தாரா பிசியானார்.
இந்த நிலையில் நயன்தாரா அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஸ்பெயினுக்கு 2வது தேனிலவு பயணத்தைத் மேற்கொண்டு உள்ளனர். தற்போது இந்த ஜோடி வெளியிட்ட படங்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாரா படங்களை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் மிகவும் கவர்ச்சியாகத் தெரிகிறார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியது. சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தை ஈர்த்தது. 'விக்கி' தனது சமூக ஊடக தளத்தில் வாழ்நாள் முழுவதும் இந்த தருணங்களை அழகாக இருக்க வேண்டும் என்று தலைப்பிட்டு இருந்தார்.