கொட்டும் மழையில், குடை பிடித்தபடி ஏழைகளை தேடி அலைந்த நயன்தாரா-விக்னேஷ் ஜோடி


கொட்டும் மழையில், குடை பிடித்தபடி ஏழைகளை தேடி அலைந்த நயன்தாரா-விக்னேஷ் ஜோடி
x

கொட்டும் மழையில், குடை பிடித்தபடி உணவு கொடுக்க இரவில் ஏழைகளை தேடி நயன்தாரா-விக்னேஷ் ஜோடி அலைந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஐதராபாத்,

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஆண்டு ஜூனில் நடந்தது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த வருடம் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றனர். திருமணமாகி சில மாதங்களிலேயே குழந்தை பெற்றது பெரிய சர்ச்சை ஆனது.

ஆனால் எங்களுக்கு 5 வருடத்திற்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்று விட்டது என அவர்கள் விளக்கம் அளித்தனர். குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயரிட்டு இருப்பதாக விக்னேஷ் சிவன் ஏற்கனவே கூறி இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா தனது மகன்களில் முழு பெயரை அறிவித்து இருக்கிறார். உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என தன் இரண்டு மகன்களின் பெயர்களையும் அவர் அறிவித்து இருக்கிறார்.

குழந்தைகளின் பெயர்கள் வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் இணையத்தில் தெரிவித்து, தங்களது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நயன்தாரா-விக்னேஷ் ஜோடி பற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், கொட்டும் மழையில் நனைந்தபடி, வீடுகளற்று தெருவோரம் இருக்கும் ஏழை, எளியோர்களுக்கு உதவும் நோக்கில், அந்த ஜோடி சென்றுள்ளது.

விக்னேஷ் சிவன் ஒரு கையில் பை ஒன்றை ஏந்தியபடியும், மற்றொரு கையில் குடை பிடித்தபடியும் செல்கிறார். உடன் டி-சர்ட் மற்றும் பேஷனான ஜீன்ஸ் பேண்ட் உடையில் நயன்தாராவும் சில பைகளை சுமந்தபடி செல்கிறார்.

இதன்பின்பு, சாலையோரம் நின்றிருந்த நபர்களுக்கு உணவு பைகளை வழங்குகின்றனர். இந்த வீடியோ வைரலானதும், அவரது ரசிகர்கள் இந்த ஜோடியின் பெருந்தன்மையை பாராட்டி வருகின்றனர். விமர்சனங்களையும், லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

நடிகை நயன்தாரா தற்பொழுது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். தவிர, அஷ்வின் சரவணன் இயக்கத்தில் வெளியான கனெக்ட் படத்திலும் அவர் நடித்து உள்ளார். இந்த படம் இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தில் வினய், சத்யராஜ் மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.


Next Story