நயன்தாரா பிறந்தநாள்... பல கோடி மதிப்புள்ள காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்..!


நயன்தாரா பிறந்தநாள்... பல கோடி மதிப்புள்ள காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்..!
x

நடிகை நயன்தாராவுக்கு பல கோடி ருபாய் மதிப்புள்ள காரை விக்னேஷ் சிவன் பரிசளித்துள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். சமீபத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்த 'ஜவான்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அறிமுகமான முதல் இந்தி படத்திலேயே நயன்தாரா பெரிய அளவில் பேசப்பட்டு விட்டார்.

டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து மணந்து வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றெடுத்த நடிகை நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பதோடு, சொந்தமாக பல தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அழகு சாதனப்பொருட்களை சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிறந்தநாள் பரிசாக இயக்குனர் விக்னேஷ் சிவன் மெர்சிடிஸ் மேபேக் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதன் விலை ரூ. 2.60 கோடியிலிருந்து ரூ. 3.40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. அந்த காரின் புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் நடிகை நயன்தாரா பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Next Story