நயன்தாரா திருமண வீடியோ சர்ச்சை; முற்றுப்புள்ளி வைத்தது ஓ.டி.டி. நிறுவனம்


நயன்தாரா திருமண வீடியோ சர்ச்சை; முற்றுப்புள்ளி வைத்தது ஓ.டி.டி. நிறுவனம்
x

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி. தள நிறுவனம் தெரிவித்துள்ளது.

சினிமா உலகமே எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. இதில் திரை பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சமூக வலைதளங்களில் இந்த திருமணம் அன்றைய தினம் 'டிரெண்டிங்' ஆனது.

இந்த திருமண வீடியோ உரிமையை பிரபல ஓ.டி.டி. தள நிறுவனம் வாங்கியுள்ளதாகவும், திருமணத்துக்கான மொத்த செலவையும் அந்த நிறுவனமே செய்துள்ளது என்றும் செய்திகள் வெளியானது. திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகியும், திருமண நிகழ்வுகள் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகவில்லை. அவ்வப்போது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியாக சுற்றுவது போல புகைப்படங்களே வெளியானது.

இதனால் திருமண வீடியோவை விரைவில் வெளியிடுமாறு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துக்கொண்டே இருந்தனர். இதற்கிடையில் திருமண வீடியோ பதிவுக்கான ஒப்பந்தத்தில் இருந்து பிரபல ஓ.டி.டி. தளம் பின்வாங்கியுள்ளது என்றும், இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது என்றும் தகவல் வெளியானது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக சம்பந்தப்பட்ட ஓ.டி.டி. தள நிறுவனம் டுவிட்டரில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளன. 'நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வீடியோ எங்கள் ஓ.டி.டி. தளத்தில் தான் விரைவில் வெளியாக போகிறது.

இதில் எந்த பிரச்சினையும் இல்லை' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story