சசிகுமார் நடிக்கும் புதிய படம்


சசிகுமார் நடிக்கும் புதிய படம்
x

டி.டி.ராஜாவின் செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் ‘நான் மிருகமாய் மாற' என்ற புதிய படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக ஹரிப்பிரியா நடிக்கிறார். சத்ய சிவா டைரக்டு செய்கிறார்.

ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் எவ்வாறு மிருகமாய் மாறுகிறான்? என்பதே படத்தின் கதை. இதில் சசிகுமார் பொறியாளராக நடிக்கிறார்.

"ஒருவனின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது? என்பது படத்தின் திருப்புமுனையாக அமையும்" என்று டைரக்டர் சத்ய சிவா தெரிவித்தார். படத்தில் வில்லனாக விக்ராந்த் நடிக்கிறார்.

படத்தைப் பற்றி சசிகுமார் கூறும்போது, "ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் கசப்பான அனுபவங்கள், அவனை எவ்வாறு மிருகமாக மாற்றுகிறது? என்பதே திரைக்கதை" என்று கூறினார். படத்தில் சண்டைக் காட்சிகள் அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். டி.டி.ராஜா தயாரிக்கிறார். இவர் 'வல்லக்கோட்டை', 'முரண்', 'வாராயோ வெண்ணிலாவே' ஆகிய படங்களை தயாரித்தவர். 'நான் மிருகமாய் மாற' படம், அடுத்த மாதம் திரைக்கு வருகிறது, என டி.டி.ராஜா கூறினார்.

1 More update

Next Story