'மோகன்தாஸ்' படக்குழு வெளியிட்ட கிளிம்ப்ஸ் வீடியோ..!


மோகன்தாஸ் படக்குழு வெளியிட்ட கிளிம்ப்ஸ் வீடியோ..!
x

விஷ்ணு விஷால் பிறந்நாளை முன்னிட்டு 'மோகன்தாஸ்' படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னை,

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'எப்ஐஆர்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மோகன்தாஸ்'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சைக்கோ மிஸ்டரி திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் இந்திரஜித் சுகுமாரன், கருணாகரன், பிரகாஷ் ராகவன், ஷாரிக் ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 'மோகன்தாஸ்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌சன் பணிகள் நடந்து வருகிறது.

நேற்று விஷ்ணு விஷால் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் அவரது பிறந்நாளை முன்னிட்டு மோகன்தாஸ் படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Next Story