அருண் விஜய் நடித்துள்ள 'யானை' படத்தின் புதிய அப்டேட்..!


அருண் விஜய் நடித்துள்ள யானை படத்தின் புதிய அப்டேட்..!
x

நடிகர் அருண் விஜய் நடித்துள்ள 'யானை' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகர் அருண் விஜய், இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'யானை'. இந்த திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், ராஜேஷ், போஸ் வெங்கட், யோகி பாபு, இமான் அண்ணாச்சி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த டிசம்பரில் யானை திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த திரைப்படம் ரிலீசுக்கு நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்டு, பலமுறை தள்ளிப்போனது. இறுதியாக யானை திரைப்படம் வருகிற ஜூன் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் யானை திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நாளை (மே 30) மாலை 6 மணிக்கு யானை படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




Next Story