'தளபதி 66' படத்தின் புதிய அப்டேட் - ரசிகர்கள் உற்சாகம்..!


தளபதி 66 படத்தின் புதிய அப்டேட் - ரசிகர்கள் உற்சாகம்..!
x

'தளபதி 66' படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். 'தளபதி 66' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.

இந்த படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். மேலும் பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படம் விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது. சமீபத்தில் இப்படத்திற்கு தெலுங்கில் 'வாரிசுடு' என்றும் தமிழில் 'வாரிசு' என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தளபதி 66 படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஜூன் 21-ம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


Next Story