சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம், கே .கே .நகர் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்


சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம், கே .கே .நகர் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 21 May 2022 6:27 AM IST (Updated: 21 May 2022 12:48 PM IST)
t-max-icont-min-icon

சென்னை சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம், கே.கே.நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது பற்றிய விவரம் வருமாறு:-

சென்னை

சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்பர்டாங்க் சாலைக்கு நேராகவும், வலதுபுறமாகவும் திரும்ப அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் ஹாரிங்டன் சாலை சிக்னல் சந்திப்பில் இடதுபுறம் மெக்னிக்கல் சாலையில் திரும்பி குருசாமி பாலம் கீழாக சர்வீஸ் சாலையில் சென்று, பின்னர் வலதுபுறம் மெக்னிக்கல் சாலையில் திரும்பி செல்ல வேண்டும்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை ) முதல் இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். இதே போல கீழ்ப்பாக்கம் தாசப்பிரகாஷ் சந்திப்பை இணைக்கும் ராஜா அண்ணாமலை சாலை, அழகப்பாசாலையில் ஈ.வே .ரா சாலை சந்திப்பு முதல், ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிமை ) முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது. காலை 9 மணி முதல், பகல் 11 மணி வரை இது அமல்படுத்தப்படும்.

நாளை முதல் கே .கே .நகர் கா சி பாயிண்ட் சந்திப்பு பகுதியிலும் 10 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. போக்குவரத்து போலீசார் மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளனர்.

1 More update

Next Story