நித்யாமேனன் உடல் எடை மீண்டும் கூடியது


நித்யாமேனன் உடல் எடை மீண்டும் கூடியது
x

8 மாத இடை வெளியில் நித்யாமேனன் மீண்டும் உடல் எடை கூடியிருக்கிறார். அவரது குண்டான தோற்றத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தென்னிந்திய திரையுலகில் மிகவும் அழகான கதாநாயகிகளில் ஒருவர் நித்யா மேனன். '180' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நித்யா மேனன், 'வெப்பம்', காஞ்சனா-2', 'ஓ காதல் கண்மணி', '24', 'இருமுகன்', 'மெர்சல்', 'சைக்கோ' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தனுசுக்கு ஜோடியாக 'திருச்சிற்றம்பலம்' படத்தில் 3 கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டில் நித்யாமேனனின் உடல் எடை திடீரென அதிகரித்தது. இதையடுத்து கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். பல மாதங்கள் போராடி மீண்டும் தனது பழைய தோற்றத்தை அடைந்தார். இந்தநிலையில் 8 மாத இடை வெளியில் நித்யாமேனன் மீண்டும் உடல் எடை கூடியிருக்கிறார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொண்ட புகைப் படங்கள் இணையதளத்தில் பரவி வருகின்றன. இதில் அவரது குண்டான தோற்றத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 'எங்கள் கண்மணிக்கு என்ன ஆச்சு?', என்று நித்யாமேனனின் வலைதள பக்கங்களில் கேள்விகளை கேட்டு ஆதங்கப்பட்டு வருகிறார்கள். இதனால் நித்யாமேனன் மிகவும் கவலை அடைந்துள்ளார். உடல் எடையை குறைக்கும் பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.


Next Story