முன்னணி நடிகர்களின் படங்களை வாங்க போட்டிபோடும் ஓ.டி.டி. தளங்கள்


முன்னணி நடிகர்களின் படங்களை வாங்க போட்டிபோடும் ஓ.டி.டி. தளங்கள்
x

அடுத்தடுத்து வெளியாக உள்ள முன்னணி நடிகர்களின் படங்களை ஓ.டி.டி. தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு பெரும் தொகைக்கு வாங்கியுள்ளன.

சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்கள் தியேட்டர்களில் ரீலீஸ் ஆனதற்கு பிறகு, ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி வருகிறது. இந்தப் படங்களை ஓ.டி.டி. தளங்களிலும் பெரும் பாலான ரசிகர்கள் பார்த்து விடுகிறார்கள். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் கமல்ஹாசனின் 'விக்ரம்' படம் ஓ.டி.டி.யில் நல்ல லாபத்தை பெற்றது.

இந்தநிலையில் அடுத்தடுத்து வெளியாக உள்ள முன்னணி நடிகர்களின் படங்களை ஓ.டி.டி. தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு பெரும் தொகைக்கு வாங்கியுள்ளன. அதன்படி வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'வாரிசு', மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் 'பொன்னியின் செல்வன்' படங்களை ஒரு ஓ.டி.டி. நிறுவனம் வாங்கி இருக்கிறது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'துணிவு', அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடித்திருக்கும் 'ஜவான்' படங்களின் உரிமையை, இன்னொரு நிறுவனம் வாங்கியிருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பிரின்ஸ்' படத்தின் ஓ.டி.டி. உரிமத்தை மற்றொரு நிறுவனம் பெற்றுள்ளது.

1 More update

Next Story