'வாரிசு' திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிப்பு


வாரிசு திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Feb 2023 2:15 PM GMT (Updated: 2023-02-22T16:37:37+05:30)

'வாரிசு' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம், கடந்த மாதம் 11-ம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

'வாரிசு' திரைப்படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்திருந்தது. இந்நிலையில், 'வாரிசு' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வரும் பிப்ரவரி 22-ந்தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


Next Story