பா.ரஞ்சித் இயக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் டீசர் வெளியானது..!


பா.ரஞ்சித் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் டீசர் வெளியானது..!
x

பா.ரஞ்சித் இயக்கியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பா.ரஞ்சித் ஒரு முழுநீள காதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு 'நட்சத்திரம் நகர்கிறது' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. காதலுக்கு பின்னால் இருக்கும் அரசியலை மையமாக கொண்டு இந்த திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story