பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படம் - நாளை டைட்டில் வெளியீடு


பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படம் - நாளை டைட்டில் வெளியீடு
x

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

'பொன்னியின் செல்வன்' படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையக்க உள்ளார்.

இந்த படம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் கூறுகையில், இது கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று கூறியிருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் நாளை இரவு 8 மணிக்கு வெளியாகும் என இயக்குநர் பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.




Next Story