பார்த்திபனின் 'இரவின் நிழல்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..!


பார்த்திபனின் இரவின் நிழல் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..!
x

பார்த்திபனின் 'இரவின் நிழல்' திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடித்து இயக்கியிருந்த 'ஒத்த செருப்பு' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து பார்த்திபன், 'இரவின் நிழல்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். அகிரா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிகிடா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இரவின் நிழல் திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் நேர்க்கோட்டில் அமையாத (Non-Linear) கதையம்சம் கொண்ட திரைப்படம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது.

இரவின் நிழல்' படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது. முன்னதாக ஜூன் 24 ஆம் தேதி இரவின் நிழல் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story